NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Galle Titans அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!



லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் 20ஆவது போட்டியில், காலி டைடன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி டைடன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ஸ்ட்ரைக்கஸ் அணி, 15.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக லஹிரு உதார மற்றும் நுவனிந்து பெனார்டோ ஆகியோர் தலா 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், டப்ரைஸ் சம்ஸி 4 விக்கெட்டுகளையும் சிக்குகே பிரசன்ன 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 75 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குக களமிறங்கிய காலி டைடன்ஸ் அணி 8.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், காலி டைடன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லசித் கிருஸ்புள்ளே 24 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 17 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் இப்தீகார் அஹமட் மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Share:

Related Articles