NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘HD’ல் Photos Share பண்ணும் WhatsApp ன் புதிய Update !

வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும். புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வரு,கிறது.

மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக செயலியில் சிறியதாக ‘HD’ என்ற ஐகான் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது.

புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார். ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய அம்சத்தை அறிவித்த மார்க் ஜூக்கர்பர்க் இத்துடன் புகைப்படம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதில் HD ஐகான் தெளிவாக இடம்பெற்று இருந்தது.

முன்னதாக இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது.

இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles