NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

2023 ஆம் ஆண்டு கடந்த சில மாதங்களில் 485 HIV தொற்றாளங்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டினை விட இந்த வருடம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இலங்கையில் இந்த ஆண்டு 4,100 HIV நோய்த்தொற்று இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் இறுதி வரை, 485 புதிய HIV நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது ஒரு அதிகரிப்பாக நாங்கள் பார்க்கிறோம். அரச மற்றும் அரச சாரா நிறுவனங்களுடனான ஒத்துழைப்புடன்HIV பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்பட்டன. இவர்களில் 80% ஆண்களே பதிவாகியுள்ளனர்.

HIV தொற்று 15-49 வயதிற்கு இடையிலானவர்கள் மத்தியிலேயே அதிகளவில் காணப்படுகிறது’ என தெரிவித்தார்.

Share:

Related Articles