NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

HIV தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

உலகம் முழுவதும் எயிட்ஸ் நோய்க்கு காரணமான எச்.ஐ.வி தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் மருந்தைக் கண்டுபிடிப்பதற்கான செயன்முறையில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென் ஆபிரிக்காவின் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் எச்.ஐவி.மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், எச்.ஐ.வி.தடுப்பு மருந்துக்கான பரிசோதனையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இது 100 சதவீதம் செயல்திறனைக் காட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படும் இந்த மருந்தின் மூலம் எச்.ஐ.வி.தொற்றால் பாதிப்புற்றவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகி அவர்கள் விரைவில் குணமாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இளம்பருவ பெண்களில் நடத்தப்பட்ட 3 கட்ட சோதனையிலிருந்து நிரூபணமாகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் பல ஆராய்ச்சிகளின் பின்னரே இச் சோதனையின் வெற்றியை பொறுத்து இந்த மருந்து சந்தையில் விற்பனைக்கு வரும் என அறிவுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles