NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICCயின் இம்மாதத்துக்கான சிறந்த வீரராக துனித் வெல்லாலகே பரிந்துரை..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகேவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரின் பெயர்களும் குறித்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் இடம்பெற்ற இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் துனித் வெல்லாலகே சிறப்பாக விளையாடி இருந்தார்.

அவர் அந்தத் தொடரில் 108 ஓட்டங்களைப் பெற்றதுடன், 7 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles