NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC-யின் புதிய விதி.

அமெரிக்காவுக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு ஐந்து பெனால்டி ஓட்டங்கள் வழங்கப்பட்டமையானது ரசிகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு மற்றும் இந்தியாவுக்கு எதிரான T20 போட்டியானது நேற்றையதினம் இடம்பெற்றது. இந்த T20 உலககோப்பையை பொறுத்தவரையில், நியூயார்க் மைதானத்தில் ஓட்டங்கள் எடுப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதற்கமைய, அமெரிக்க அணி 20 ஓவர்களில் 110 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி மட்டும் இதற்கு விதி விலக்கல்ல ஓட்டங்கள் சேர்ப்பதில் மிகவும் தடுமாறியதோடு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். சிவம் துபே மற்றும் சூர்யகுமாரின் நிதானமான ஆட்டமே இந்தியாவை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில், இந்த போட்டியின் போது அமெரிக்க அணித்தலைவர், ஓவர்களுக்கு இடையே குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால்,ஐசிசி-யின் புதிய விதிப்படி அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டியாக விதிக்கப்பட்டது.

போட்டிகளை விரைவாக நடத்தும் நோக்கில், ஐசிசி ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஒரு அணி, அடுத்த ஓவருக்கு தயாராக 1 நிமிடத்திற்கு மேல் இரண்டு முறை தாமதம் செய்தால், அணிக்கு 5 ஓட்டங்கள் பெனால்டி விதிக்கப்படும்.அமெரிக்க அணி, மூன்றாவது முறையாக தாமதம் செய்ததால், அவர்களுக்கு பெனால்டி வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் இதன்மூலம் இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கும் 3வது அணியாக இந்தியா முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles