NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC உலகக் கிண்ணத் தொடரில் இன்று இலங்கை VS தென்னாபிரிக்கா !

ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இன்று தென்னாபிரிக்காவை இலங்கை அணி எதிர்கொள்கிறது.

குறித்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியில் மகீஷ் தீக்ஸன ஆடுவது சந்தேகம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

2023ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரில் தமது முதல் போட்டியில் நாளை இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவை டெல்லியில் வைத்து எதிர்கொள்கின்றது.

அதன்படி இப்போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த மகீஷ் தீக்ஸன முன்னெச்சரிக்கை கருதி நாளைய போட்டியில் தெரிவுகளுக்காக கருத்திற் கொள்ளப்படமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆசியக் கிண்ணத் தொடரின் போது உபாதைக்குள்ளாகியிருந்த மகீஷ் தீக்ஸன ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி அதனை தொடர்ந்து உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை ஆடிய பயிற்சி ஆட்டங்கள் போன்றவற்றில் பங்கெடுக்காது போயிருந்தார்.

இந்த நிலையில் அணிக் குழாத்திற்குள் திரும்பி இருக்கும் அவர் உபாதை ஆபத்தில் இருந்து தவிர்ந்திருக்கின்ற போதும் முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தென்னாபிரிக்க மோதலில் ஓய்வளிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகின்றது.

இதேநேரம் இலங்கை அணியின் பயிற்சியாளரான கிறிஸ் சில்வர்வூட் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளின் உபாதை ஆபத்துக்களை எதிர்கொண்டிருந்த இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க மற்றும் குசல் பெரேரா ஆகியோர் தென்னாபிரிக்கா மோதலில் பூரண உடற்தகுதியுடன் காணப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

Share:

Related Articles