NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC உலகக் கிண்ணப் போட்டிகளை இலவசமாக பார்க்க ஒரு புதிய வசதி !

ஐசிசி உலகக் கிண்ணப் போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டிகளை தொலைபேசிகளில் இலவசமாகவும், குறைந்த டேட்டாவில் நீங்கள் பார்க்க ஹாட்ஸ்டார் தளம் புதிய வசதியையும் கொண்டு வந்துள்ளது.

ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணத் தொடர் நாளை (OCT 5) முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவின் 10 நகரங்களில் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என 10 அணிகள் விளையாடுகின்றன.

அடுத்த 45 நாட்களுக்கு இந்த தொடர் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.

இந்த உலகக் கிண்ணத்தில் (ICC World Cup 2023) சிறப்பான விடயம் என்னவென்றால், டிஸ்னி+ ஹொட்ஸ்டார் (Disney+ Hotstar) முழு தொடரையும் இலவசமாக வழங்குகிறது.

அதாவது, டிஸ்னி+ ஹொட்ஸ்டார் செயலியை உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து நீங்கள் இலவசமாக (Hotstar Free Streaming) காணலாம்.

Share:

Related Articles