NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC ‘வளர்ந்து வரும் வீராங்கனை விருது’ பெயர் பட்டியல் வெளியீடு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி T20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.

அதேபோல் ஒவ்வொரு வருடமும் இளம் வீராங்கனைகளின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு ‘வளர்ந்து வரும் வீராங்கனை விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது.

அந்த வகையில்இ 2024ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ICC பரிந்துரைத்து பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் இந்தியாவை சேர்ந்த ஷ்ரேயங்கா பாட்டீல், அயர்லாந்து வீராங்கனை பிரேயா சார்ஜென்ட், ஸ்காட்லாந்தின் சஸ்கியா ஹார்லி மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அன்னெரி டெர்க்சன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Share:

Related Articles