NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC இன் தலைவராக ஜெய்ஷா…?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரான ஜெய்ஷா உலக அமைப்பின் இளைய தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்று எதிர்க்கப்படுகின்றது.

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தனது வருடாந்த மாநாட்டை இந்த மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளது,ஜூலை 19 முதல் 22 வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கான தேர்தல் நிகழ்ச்சி நிரலில் இருக்காது.

எனினும், கொழும்பின் வருடாந்த மாநாட்டில், இணை இயக்குநர்களுக்கான தேர்தல் ஜூலை 19 அன்று நடைபெறவுள்ளது.சர்வதேச கிரிக்கட் சம்மேளன இயக்குநர்கள் குழுவில் உள்ள மூன்று பதவிகளுக்கு பதினொரு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை சம்மேளனத்துக்கான புதிய தலைவர் நவம்பரில் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பெரும்பாலும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவரான ஜெய்ஷா உலக அமைப்பின் இளைய தலைவராக தெரிவுசெய்யப்படுவார் என்று பரவலாகக் கூறப்படுகிறது.

Share:

Related Articles