NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMFஇடமிருந்து அதிக கடன் பெற்ற 4வது நாடான பாகிஸ்தான் !

பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனை சமாளிப்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை வாங்கி வருகிறது.

அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.3 லட்சம் கோடியுடன் அர்ஜென்டினா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 3 பில்லியன் டாலர் கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டுளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடனை பெறும்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகம் கடன் பெற்ற 4வது நாடாக பாகிஸ்தான் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles