NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IMF உடன்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை தாமதம்!

சர்வதேச நாணய நிதியத்தின் 57 உடன்பாடுகளில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 38ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளதாக verite research நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மாத இறுதிக்குள், இலங்கை 38 உடன்படிக்கைகளை நிறைவேற்றியுள்ளது,

எனினும், நிதி வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தும் ஆன்லைன் தளத்தை நிறுவுவதற்கான முக்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதை இலங்கை இன்னும் தவறவிட்டுள்ளது.

இது கடந்த மார்ச் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என verite research நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தின், இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய 11 உடன்படிக்கைகளின் முன்னேற்றத்தை அளவிடுவதற்கு போதுமான தரவு இல்லை என்பதால் அவை அறியப்படாத பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 8 உடன்பாடுகளை இலங்கை நிறைவேற்றவில்லை என்றும் verite research நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான இரண்டாவது கடனுதவிக்கான அனுமதி அக்டோபர் இறுதிவரை தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுவதாக verite research தெரிவித்துள்ளது.

Share:

Related Articles