சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காகவே சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வுக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 11 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.