சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான இரண்டாவது தவணை தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதிகளை மீளாய்வு செய்வதற்காக முன்வைத்த கருத்துகளின் பிரகாரம் இவ்வாறு இரண்டாம் கட்ட கடன் தவணை தாமதமாகும் என அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதாரம் சில சாதகமான அம்சங்களைக் காட்டினாலும், பல்வேறு துறைகளில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று தூதுகுழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் கூறியுள்ளார்.
குறிப்பாக வரி அறவீடு முறையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு விடயங்களை இந்த ஊடகச்சந்திப்பில் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இரண்டாவது தவணையை வழங்குவது தொடர்பான பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கு குழு மேலதிக கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாகவும் பீட்டர் ப்ரூவர் தெரிவித்தார்.
முதல் மதிப்பாய்வின் ஊழியர்கள் நிலை ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அதிக நேரம் தேவைப்படும் எதிர்பார்க்கிறோம் என்றும் பீட்டர் ப்ரூவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட 2.9 பில்லியன் டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான இரண்டாவது தவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என கருதப்படுகிறது.