NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்க வைத்தியசாலைகளில் சைபர் தாக்குதல் : சுகாதார சேவைகள் பாதிப்பு

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இந்த சைபர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனால் வைத்தியசாலைகளின் கணினி அமைப்புகள் முடங்கியதாகவும் இதையடுத்து மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அறுவை சிகிச்சைகள், வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் பிற சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் சில அவசர அறைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சைபர் தாக்குதல் மூலம் வைத்தியசாலைகளின் தகவல்களை திருட வாய்ப்பு இருந்ததால் அதை தடுக்க, சர்வர்கள் ஆப்லைனில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சைபர் தாக்குதலில் இருந்த கணினி அமைப்புகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles