சமீபத்தில் ஒரு ஜப்பானிய நிறுவனம் உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்கிரீமை அறிமுகம் செய்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.
இந்த ஐஸ் கிரீம் விலை 8,73,400 ஜப்பானிய யென் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானைச் சேர்ந்த செல்லாடோ என்ற ஐஸ்கிரீம் நிறுவனம் இதை உற்பத்தி செய்துள்ளது.
அரிய பொருட்களைக் கொண்டு இந்த ஐஸ்கிரீம் உருவாக்கப்படுவதாலேயே அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியின் ஆல்பாவிலிருந்து கிடைக்கும் அரிதான உணவு பண்டத்தைக் கொண்டு இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது.
இத்தாலியில் கிடைக்கும் குறித்த பண்டம் ஒரு கிலோ 2 மில்லியன் ஜப்பானிய யென் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல அதிக விலை கொண்ட Pயசஅபையைழெ சுநபபயைழெ மற்றும் ளயமந டநநள ஆகியவை இதில் பயன்படுத்தப்படுகிறது.
உலகின் அதிக விலை கொண்ட ஐஸ்கிரீமை உருவாக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் செல்லட்டோ இதைத் தயாரிக்கவில்லை.
அவர்கள் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய பொருட்களை இணைத்து ஒரு ஐஸ்கிரீமை உருவாக்க முயற்சி செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.