பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த தொலைபேசியை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்ட போதும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் குறித்த தொலைபேசியை பார்வையிட்ட திருடன் அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை கண்டுள்ளார்.
இதன்பின்னர் இவ்வளவு அழகான பெண்ணிடம் தொலைபேசியைப் பறித்துவிட்டோமே என வருந்திய அவர் இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் தொலைபேசியை திருப்பி கொடுத்துள்ளார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கியுள்ளார்.
நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளதோடு கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக தெரிவிக்கும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும்; இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது ஆனால் இது உண்மையானது எனவும் பலர் பதிவிட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.