NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மரண தண்டனை நிறைவேற்றம்!

அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டித்துள்ளார்.

இப்படியான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமையானது சித்திரவதை செய்தமைக்கு இணையானது எனவும் அவர் கூறியுள்ளார்.

கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வோல்கர் டர்க், “நைட்ரஜன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது, கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதற்கு முன்னர் பரீட்சித்து பார்ககப்படவில்லை. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சித்திரவதை செய்வதற்கு ஈடானது” எனக்கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles