NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனித மூளைக்குள் மைக்ரோ சிப்? – எலான் மஸ்க்கின் அடுத்தக்கட்ட அதிரடி பரிசோதனை!

மனித மூளைக்குள் சிப் வைக்கும் நியூராலிங்க் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவினால் மனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

எலான் மஸ்க் தனது மூளை சிப் ஸ்டார்ட்அப் நிறுவனமான நியூராலிங்க் (Neuralink) இந்த ஆண்டு மனித சோதனைகளைத் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற விவா டெக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

டெட்ராப்லெஜிக் அல்லது பாராப்லெஜிக் நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய நியூராலிங்க் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், அவர் தனது நிறுவனம் எத்தனை நோயாளிகளுக்கு இந்த சிப்பை பொருத்தும் மற்றும் எவ்வளவு காலத்திற்கு என்பது பற்றியும் கூறவில்லை.

ஆனால் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நோயாளிக்கு பொருத்தி சோதனையை தொடங்கும் என கூறினார்.

விலங்குகளின் நடத்தையில் அதன் விளைவுகள் குறித்து அமெரிக்க ஆய்வுகளை எதிர்கொள்ளும் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு (நியூராலிங்க்) இது ஒரு தனித்துவமான சாதனையாகும்.

மூளை உள்வைப்புகள் மற்றும் அறுவைசிகிச்சை ரோபோக்களில் பயன்படுத்த நியூராலிங்க் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று FDA ஒப்புக்கொண்டது, ஆனால் சோதனை தொடர்பான கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டது.

நியூராலிங்க் தனது சாதனத்தை மனிதர்களுக்கு பாதுகாப்பானதாக நிரூபிப்பதில் வெற்றி பெற்றாலும், பாதுகாப்பான வணிக பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles