ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியுள்ளது.
பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்துஇ கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்துள்ளது.
உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.