NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமேசன் வனப் பகுதியில் இருந்து 40 நாட்களின் பின் மீட்கப்பட்ட குழந்தைகள் !

கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1 ஆம் திகதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு விமானி அவசரநிலையை அறிவித்த நிலையில் திடீரென விமானம் விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில் விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

எவ்வாறாயினும் சிறுவர்கள் 4 பேர் உயிருடன் இருந்து தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, இந்த சிறுவர்கள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

விபத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் உள்ளடங்குகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles