தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு கடந்த 9ஆம் திகதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜனாதிபதி வேட்பாளர் பெர்னாண்டோ படுகொலை செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ஈக்வடாரில் மேலும் ஒரு அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் அதிபர் ரபேல் கொரியாவின் குடிமக்கள் புரட்சி கட்சியை சேர்ந்த தலைவரான பெட்ரோ பிரையோன்ஸ் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அவர் சான்மேடியோ நகரில் வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.