NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈரானில் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம்

ஈரானில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று கல்வி கற்பதை தடுக்க அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோம் நகரில் அதிகளவில் சிறுமிகளுக்கு சிலரால் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக  தெரிய வந்ததுள்ளது. இச்சம்பவத்தை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. பெண்கள் கல்வி கற்பதை தடுப்பதற்காக சிலர் இது போன்று செய்து வருகிறார்கள் என்றும் பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்தி சிலர் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்களில் மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பள்ளி மாணவிகள் மீது விஷவாயு செலுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. ஹமேடன், ஜான்ஜன், மேற்கு அஜர்பை ஜான், பார்ஸ், அல்போர்ஸ் மாகாணங்களில் சுவாச கோளாறு உள்ளிட்ட பிரசனைகளால் ஏராளமான மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் பள்ளிகள் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ஈரானில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானில் 10 மாகாணங்களில் 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் உள்ள மாணவிகள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share:

Related Articles