ஜப்பான் ஷின்-சிடோசே (Shin-Chitose) விமான நிலையத்தில் உள்ள கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
சுமார் 200 விமானச் சேவைகள் தாமதம் அடைந்துள்ளதுடன், ஏறக்குறைய 35 விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி கடந்த 17ஆம் திகதி காலை 9 மணிக்கு கத்திரிக்கோல் ஒன்று காணாமல் போயுள்ளது.
அதனைத் தொடர்ந்து பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காணாமல்போன கத்தரிக்கோல் நேற்று (19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.