NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நியூ கலிடோனியா தீவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் வெளியீடு

பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.


10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.7 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க நிலநடுக்கவியல் துறை தெரிவித்து உள்ளது.


நிலநடுக்கத்தையடுத்து நியூ கலிடோனியா மற்றும் பிஜூ தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles