NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகாராஷ்டிராவில் பஸ் தீ பிடித்து விபத்து – 25 பேர் பலி!

இந்தியா – மகாராஷ்டிரா மாநிலத்தில் யாவத்மால் என்ற இடத்தில் இருந்து புனேவுக்கு சென்ற பஸ் ஒன்று தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 


குறித்த சம்பவம் சம்ருத்தி மகாமர்க் அதிவேக நெடுஞ்சாலையில் பல்தானா என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.


இருந்தாலும் பஸ்ஸில் இருந்தவர்கள் தப்பியோட முடியவில்லை. 25 பயணிகள் உயிரோடு எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இன்று அதிகாலை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


எரிந்த பஸ்ஸில் இருந்து 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 32 பேர் பயணம் செய்ததில் 8 பேர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். 


காயம் அடைந்தவர்கள் புல்தானாவில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles