NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனைவியை நீண்ட நேரம் சுமக்கும் போட்டியில் உலக சாதனை படைத்த கணவர்…!

கம்போடிய தலைநகர் நாம் பென்னில் உலக சாதனை படைக்கும் நோக்கில் மனைவியை நீண்ட நேரம் சுமக்கும் போட்டி நடைபெற்றது. ஆணின் வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் மொத்தம் 250 ஜோடிகள் பங்கேற்றன.

சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்த போட்டியில் இருந்து 245 ஜோடிகள் ஒருவர் பின் ஒருவராக விலகிய நிலையில், 8 மணி நேரம் 20 நிமிடங்கள் மனைவியை சுமந்து சாதனை படைத்தவருக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அடுத்த 4 இடங்களை பிடித்த ஜோடிகளுக்கு பைக் பரிசு அளிக்கப்பட்டது. 

Share:

Related Articles