இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள முட்டைக்கு 14 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளமையினால் சதொச விற்பனை நிலையங்களில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
தற்போது சதொச விற்பனை நிலையங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வர்த்தக நிலையங்களில் 51 ரூபாய் முதல் 52 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
புதுவருடத்தின் போதும் முட்டை சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என வர்த்தகர்கள் தெரிவிப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.