எச்1-பி விசா விண்ணப்பங்கள் தங்கள் முதலாளிகளின் மோசடி நடவடிக்கைகளின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறி, 70 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனிநபர்களாகிய தங்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முறையிடும் இந்த வழக்கு அதிகாரப்பூர்வமாக வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் வெளிநாட்டு பட்டதாரிகளுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தங்கள் முதலாளிகளால் நடத்தப்படும் தவறான நடத்தை மற்றும் மோசடிகளில் எந்த ஈடுபாட்டையும் மறுக்கும் மனுதாரர்கள், தங்களுக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
குறித்த இந்திய பிரஜைகள், தங்களை பணியமர்த்திய நிறுவனங்களுடனான அவர்களின் தொடர்புகள் தொடர்பான பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதோடு அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தைக் கூற வாய்ப்பளிக்காமல் விசாக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக 70 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த வழக்கு வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த விசாரணைகள் தொர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.