NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அமெரிக்காவில் வீடு வெடித்து சிதறி 5 பேர் பலி !

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் அலெகெனி பகுதியில் உள்ள ஒரு வீடு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதான அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் மின்சாரம் மற்றும் கியாஸ் வினியோகம் உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளதோடு மேலும் 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles