(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தில் பழமையான இந்து கோயில் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 20 தொடக்கம் 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
கடும் மழையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.