NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இனி புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்!

இந்தியாவில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில், 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியக் கல்விக் கொள்கை-2020 அடிப்படையில் பாடத்திட்டம், தேர்வு முறை உட்பட பல்வேறு மாற்றங்களை சிபிஎஸ்இ வாரியம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் 9 முதல் 12-ம்வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையைக் (ஓபிஇ) கொண்டு வருவதற்கு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 9,10-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  அறிவியல் பாடங்களுக்கும்,  11, 12-ம் வகுப்புகளுக்கான ஆங்கிலம், கணிதம்,  உயிரியல் பாடங்களுக்கும் புத்தகம் பார்த்துதேர்வு எழுதும் நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Share:

Related Articles