NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்போடியா பிரதமர் திடீர் பதவி விலகல் !

கம்போடியா பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் பாராளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.

இதில் ஆளும் கட்சியான கம்போடியா மக்கள் கட்சியும் தேர்தலில் கலந்து கொண்டதுடன் தேர்தல் முடிவுகள் அதற்கு சாதகமான நிலையிலேயே அமைந்துள்ளது.
125 இடங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் 96 சதவீத வாக்குகளை பெற்று 120 இடங்களை பிடித்து கம்போடியா மக்கள் கட்சி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் ஆசியா நாடுகளிலேயே நீண்ட கால பிரதமராக பதவி வகித்து வந்த ஹூன் சென்(வயது 70) மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.

இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து சென் பதவி விலக உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.


3 வாரங்களுக்குள் பொறுப்புகளை அனைத்தையும் தன் மூத்த மகனான ஹூன் மனேட்டிடம் ஒப்படைத்து விட்டு பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அந்நாட்டின் பாதுகாப்புத்துறையை ஹூன் மனேட் கவனித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles