NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Iphone 15 எப்படி இருக்கப்போகிறது தெரியுமா ? இதோ சில tech leaks…


உலகளவில் எதிர்வரும் ஜூலை மாதம் ஐபோன் 15 வெளியாகவுள்ளது.
இந்த போனில் புதிய வகை பட்டன்கள் அறிமுகமாகலாம் எனவும் எந்த ஒரு நேரடி பட்டன் இல்லாமல் சென்சார் போன்று இருக்கலாம் எனவும் விவரங்கள் கசிந்தன.


ஆனால் தற்போது இதில் புதிதாக ஒரு நேரடி பட்டன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்டன் மூலமாக நாம் பல வேலைகளை செய்யலாம். உதாரணமாக Apple Watch Ultraவில் இதேபோன்ற Action button ஒன்றை காணலாம். அந்த பட்டன் மூலம் நாம் Stopwatch, workout, Backtrack போன்ற பல ஆப்ஷன்களை தேர்வு செய்யலாம். இதன்மூலம் நாம் Turnoff செய்யவும் முடியும்.

இந்த Action button வைத்து நாம் கேமரா எடுக்கவும் முடியும். இதை மெதுவாக அழுத்துவதன் மூலம் Auto Focus செய்யவும் அதே நேரம் முழுமையாக அழுத்துவதால் புகைபடம் எடுக்கவும் முடியும். இதை அப்படியே அழுத்தி ஹோல்டு செய்வதால் நாம் வீடியோ ரெகார்ட் செய்ய துவங்கலாம்.


இதில் 3nm process டெக்னாலஜி சார்ந்து உருவாக்கப்பட்ட புத்தம் புதிய A17 Bionic Chip இடம்பெறும் என்று தெரிகிறது. Iphone 15 Pro மற்றும் Pro Max ஆகிய மாடல்களில் இந்த A17 Bionic SOC இடம்பெறும் என்று தெரிகிறது.

இதில் மேலும் வளைவான Bezels, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பதிலாக டைட்டானியம் பிரேம், நேரடி பட்டன்களுக்கு பதிலாக ஹாப்டிக் சென்சார் போன்றவை இடம்பெறும். மிக முக்கியமான வசதியாக அனைத்து மாடல் போன்களிலும் இதுவரை உள்ள லைட்னிங் போர்ட் பதிலாக USB Type-C சார்ஜிங் போர்ட் இடம்பெறும்.

Share:

Related Articles