16ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 9ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு போட்டி இடம்பெறவுள்ளது.
நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழை பாதிப்புக்குள்ளான தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடம் வீழ்ந்தது.
முந்தைய சீசனில் அந்த அணியின் தலைவராக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு வெளிநாட்டில் சிகிச்சை செய்ய இருப்பதால், இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிவிட்டார். மேலும் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல்-ஹசனும் விலகி உள்ளார்.
அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் பங்களாதேஷ் வீரர் லிட்டான் தாஸ் இன்னும் அணியினருடன் இணையவில்லை. இவையெல்லாம் கொல்கத்தா அணிக்கு பின்னடைவாகும்.