NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL அட்டவணை வெளியானது!

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக ஐ.பி.எல் தொடரின் 17ஆவது சீசனானது மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது.

இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கிண்ணங்களை வென்றுள்ளன. 

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, இன்று வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 15 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles