NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL இறுதி போட்டியில் CSK உடன் குஜராத் மோதல்!

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று இடம்பெற்ற குவாலிபயர் 2 போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. 

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியின் சுப்மன் கில் 129 ஓட்டங்கள் குவித்தார்.

இதையடுத்து 234 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இழக்குடன் களமிறங்கிய மும்பை 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பையை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 

இந்நிலையில், நாளை (28) நடைபெறவுள்ள இறுதிபோட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மோதுகின்றன. 

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி ஐபிஎல் கிண்ணத்தை கைப்பற்றும். சென்னை சுப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கிண்ணத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles