NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL இல்லாவிட்டால் என்ன, LPLலில் களமிறங்கும் சுரேஸ் ரெய்னா !

லங்கா பிரீமியர் லீக் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதற்கான ஏலப்பட்டியலில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.


ஜூன் 14ஆம் திகதி கொழும்பில் ஏலம் நடைபெறவுள்ளதோடு போட்டிகள் ஜூலை 31ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன.
ரெய்னா, ஆக்ரோஷமான ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதுடன் ஐபிஎல் தொடக்க சீசனில் இருந்து ஒரு சிறந்த வீரராக ஜொலித்தவர்.

அவர் ஐபிஎல்லில் 205 போட்டிகளில் விளையாடி 5,500 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் IPL போட்டிகளில் CSK அணியில் பங்குகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏலத்தில் யாரும் அவரைக் கொள்வனவு செய்யாதிருந்தனர்.
குறித்த விடயமம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது அவர் LPL போட்டிகளுக்காக தனது பெயரைப் பதிவு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது

Share:

Related Articles