நியூசிலாந்து அணியின் இளம் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வாங்கியுள்ளது.
அவரை 1.8 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
நடந்து முடிந்த ஐம்பது ஒவர் ஒருநாள் உலகக் கிண்ண தொடரில் ரச்சின் சிறப்பாக விளையாடியிருந்தார்.
அதேபோல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரையும் சென்னை அணி அவரின் அடிப்படை விலையான இரண்டு கோடிக்கு வாங்கியுள்ளது.
முன்னதாக சென்னை அணிக்கு விளையாடிய ஷர்துல் தாகூர், கடந்த பருவத்தில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்நிலையில் அவர் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியுள்ளார்.
டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் அணி வாங்கியது
கடந்த மாதம் நடந்த 50 ஓவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டது. இறுதியில் 68 மில்லியன் ரூபாவிற்கு அவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
1.5 கோடிக்கு விலை போன வனிந்து ஹசரங்க
இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 1.5 கோடி ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
கடந்த பருவத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய இலங்கையின் சகல துறை வீரர் வனிந்து ஹசரங்கவை, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
ஹாரி புரூக்கை வாங்கியது டெல்லி கெப்பிடல்ஸ்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது. கடந்த பருவத்தில் அவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாடியிருந்தார்.
சுமார் 40 மில்லியன் ரூபாவிற்கு அவரை டெல்லி அணி வாங்கியுள்ளது.
20 மில்லியன் ரூபா அடிப்படை விலையில் இருந்து தொடங்கிய அவருக்கான ஏலத்தின் போது இறுதியில் டெல்லி அணி அவரை வாங்கியுள்ளது.
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் டெல்லி அணி அவரை வாங்குவதற்கு கடும் போட்டியிட்டிருந்தது.
ஐ.பி.எல் ஏலம் ஆரம்பம்
அடுத்த ஆண்டு இடம்பெவுள்ள ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் சற்று முன்னர் துபாயில் உள்ள Coca-Cola அரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
இந்த எலத்தில் சுமார் 333 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
வீரர்களை வாங்குவதற்கு சுமார் 2.63 பில்லியல் இந்திய ரூபாய் பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1100க்கும் மேற்பட்ட வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் 333 வீரர்களின் பெயர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஏலம் இரண்டு நாட்களுக்கு நடைபெறும்.
10 அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களை வாங்குவதற்கு கடும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தின் மூலம் 77 வீரர்களின் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.