NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL ஏலத்தை நடத்தப்போகும் முதல் பெண்!

IPL தொடருக்கான மினி ஏலத்தை இந்தியாவை சேர்ந்த மல்லிகா சாகர் என்ற பெண்  நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

IPL ஏலத்தை ரிச்சர்ட் மெட்லி, சாரு சர்மா, ஹூஜ் எட்மெடாஸ் உள்ளிட்டோர் நடத்தியுள்ளனர். அதிலும் 2022ஆம் ஆண்டு IPL  ஏலத்தில் ஹசரங்கவை ஏலம் விட்டபோது எட்மெடாஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சாரு சர்மா ஏலத்தை நடத்தி கொடுத்தார்.

 கடந்த ஆண்டு ஏலத்தை எட்மெடாஸ் நடத்தினார். ஆனால் இம்முறை ஐ.பி.எல் ஏலதாரராக பெண் ஒருவரை IPL நிர்வாக குழு நியமித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அந்த வகையில் மும்பையை சேர்ந்த மல்லிகா சாகர் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு முதல் ப்ரோ கபடி லீக் ஏலத்தை நடத்தினார். அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தையும் நடத்தியுள்ளார். 2001ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஏல நிறுவனத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், IPL ஆடவர் தொடருக்கான ஏலத்தை நடத்தும் முதல் பெண்ணாக சாதனை படைக்கவுள்ளார். 

Share:

Related Articles