NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ISL கால்பந்து – MC vs NEU அணிகள் இன்று மோதல்!

13 அணிகளுக்கு இடையிலான 11ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை சிட்டி – நோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை சிட்டி 5 வெற்றி, 5 சமநிலை, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

அதேபோல 12 ஆட்டங்களில் விளையாடியுள்ளநோர்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 5 வெற்றி, 3 சமநிலை, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது.

Share:

Related Articles