NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LGBTQ கொடியை பறக்கவிட்ட பெண் சுட்டுக்கொலை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது துணிக்கடை வாசலில் LGBTQ சமூகத்தின் கொடியை பறக்கவிட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

லோஸ் ஏஞ்சல்ஸ்க்கு அண்மையில் உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பிரதேசத்தில் சிறிய துணிக் கடை வைத்திருந்தவர் லாரா ஆன் கார்லேடன்.

66 வயதான இவர் தனது கடையின் வாசலில் LGBTQ சமூகத்தின் கொடியை ஏற்றிவைத்துள்ளார்.

இதனையடுத்து லாராவின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கொடியை உடனடியாக அகற்றுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறவே அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து லாராவை நோக்கி சுட்டுள்ளார்.

லாரா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் தகவலறிந்த பொலிஸார் தப்பியோடிய அந்த மர்ம நபரை விரட்டிச் சென்று கைது செய்துள்ளனர்.

குறித்த மர்ம நபர் அந்த நபர் பொலிஸாரை நோக்கி சுட முயன்ற நிலையில் பொலிஸார் திருப்பிச் சுட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்.

உயிரிழந்த லாரா தன்னை LGBTQ சமூகத்தின் உறுப்பினராக அறிவிக்கவில்லை எனினும் அவ்வப்போது LGBTQ அமைப்புகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்ததாகவும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles