மற்றவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்க உதவும் லின்க்டுஇன் (LinkedIn) நிறுவனத்தில் பணியாற்றி வரும் 700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லின்க்டுஇன் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு காலாண்டுகளாக வருவாய் அதிகரித்து வரும் நிலையிலும், லின்க்டுஇன் நிறுவனம் தற்போது பணிநீக்க நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகிறது.
பணிநீக்க நடவடிக்கை மூலம் நிறுவனத்தின் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஊழியர்கள் படிநிலையை குறைத்து அதிவேகமாக முடிவுகளை எடுக்க உதவும் என்று லின்க்டுஇன் தலைமை செயல் அதிகாரி ரியான் ரோஸ்லன்ஸ்கி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்து இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
லின்க்டுஇன் நிறுவனத்தில் புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், பணிநீக்க நடவடிக்கை மூலம் பாதிக்கப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.