NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய மேலதிக கண்காணிப்பு குழுக்கள் நியமனம்!

நாடு முழுவதும் மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிய முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கண்டி மாவட்டம், மாவனெல்ல, பேராதெனிய, கெலிஓயா, கம்பளை, உடபுஸ்ஸலாவ, நாவலப்பிட்டி, உலபனே, தென்னே கும்புர, குண்டசாலை, திகன மற்றும் கடுகன்னாவை உள்ளிட்ட பகுதிகளில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் அரிசி வர்த்தகர்களை தேடி 5 மேலதிக குழுக்களை ஈடுபடுத்தி சுற்றிவளைப்பில் ஈடுபட்டதாக அந்த சபை தெரிவித்தது.

இதன்போது, அதிக விலைக்கு அரிசி விற்ற 2 நிறுவனங்கள் உட்பட 25 வர்த்தகர்கள் மீது அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கடந்த சில நாட்களிலும் இன்றும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களால் 6.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles