NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்பு!

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவுக்கமைய, கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

அத்துடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கு அமைய, பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles