NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டுபாய் மற்றும் இந்தியா இடையே கடலுக்கடியில் புகையிரத சேவை..!

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கடியில் புகையிரத சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி டுபாய் மற்றும் மும்பைக்கு இடையே கடலுக்கு அடியில் செல்லும் புகையிரத பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இந்த புகையிரத பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் புகையிரத மணிக்கு 600 முதல் 1000 கிலே மீற்றர் வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


டுபாயில் இருந்து 2 ஆயிரம் கிலே மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் புகையிரத போக்குவரத்தும் இணையவுள்ளது.

Share:

Related Articles