NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் பஸ் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழப்பு..!

தனியார் பஸ் ஒன்றின் சக்கரத்தில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.

62 வயதுடைய எல்லந்த களுகஹ  பிட்டமாறுவ பகுதியை சேர்ந்த  பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பஸ் மீகாகியூல தொடக்கம் பிட்டமாறுவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் இருந்து ரோபேரி சிறி நாகாராம ஆலயத்திற்கு அருகில் குறித்த வயோதிப பெண் பஸ்ஸில் இருந்து இறங்குவதற்கு  பஸ்சை நிறுத்தி விட்டு பெண் இறங்கியதும் மீண்டும் பஸ் பயணிக்கும் போதே குறித்த பெண் பஸ்ஸின் பின் சக்கரத்தில்  சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர். 

பஸ்ஸின் சாரதி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles