பதுளை – செங்கலடி பிரதான வீதியின் பசறை 13 ஆம் கட்டை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால், குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், குறித்த மண்சரிவினை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.