மதுவரி கட்டளைச் சட்டத்தில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியமபலபிட்டிய தெரிவித்துள்ளார்.
“தற்போதுள்ள மதுவரி சட்டம் மிகவும் பழமையானது என்பதுடன், அது காலாவதியானது. அதன் விதிகளுக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. ஆகவே, சட்டத்தில் உடனடியாக திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
விரைவாக திருத்தங்கள் சமர்ப்பிக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சட்டங்களில் ஒன்றாக கலால் கட்டளைச் சட்டம் காணப்படுகிறது.
மதுவரி கட்டளைச் சட்டத்தில் கடந்த 100 வருடங்களில் ஆயிரம் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன.
ஆகவே, இந்த சட்டம் அதிக எண்ணிக்கையிலான பிளாஸ்டர்களை ஒட்டுக்கொண்டுள்ள ஒரு நோயாளியைப் போன்றது.
சட்டம் அதன் விதிகளுக்குள் பல ஓட்டைகளைக் கொண்டிருப்பதால் பல முக்கிய விடயங்களை மறைக்கத் தவறிவிட்டது“ என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.