ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (02) கொண்டாடப்படுகிறது.
1951ஆம் ஆண்டு இதே நாளில் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள தனியார் விருந்தகமொன்றில் இன்று விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிநாடுகளின் தூதுவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.